head


பேனசீர் பூட்டோ தன்னை கொல்லும் திட்டம் தெரிந்தும் சாவைத் தழுவினாரா? ரெஹான் ஃபைசல்

|Tuesday, 29th December 2020|Political| Page Views: 84

2007 டிசம்பர் 26 ஆம் தேதி இரவு, பெஷாவரில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள தனது ஜர்தாரி மாளிகையை அடைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோ, மிகவும் சோர்வாக இருந்தார், ஆனால் ஐ.எஸ்.ஐ தலைவர் மேஜர் ஜெனரல் நதீம் தாஜ், முக்கியமான விஷயமாகத் தன்னைச் சந்திக்க விரும்புவதாக அவருக்குத் தகவல் வந்தது.

பேனசீர் பூட்டோ இரண்டு மணி நேரம் உறங்கிவிட்டு பின்னர் அவரை சந்திக்க முடிவு செய்தார். இந்தச் சந்திப்பு ஒன்றரை மணிக்கு நடந்தது. இதில், அவரது பாதுகாப்பு ஆலோசகர் ரெஹ்மான் மாலிக்கும் கலந்து கொண்டார்.

அன்று அவரைக் கொல்ல முயற்சி நடக்கவிருப்பதாக நதீம் தாஜ் கூறினார். அவர் தனது தகவலின் ஆதாரத்தை உறுதியாக நம்பியதால், அவரே இஸ்லாமாபாத்தில் உள்ள பேனசீர் இல்லத்திற்கு அன்று இரவே சென்றார்.

பிபிசி இஸ்லாமாபாத் முன்னாள் நிருபர் ஓவன் பென்னட் ஜோன்ஸ் 'த பூட்டோ டைனஸ்டி - த ஸ்ட்ரகில் ஃபார் பவர் இன் பாகிஸ்தான்' என்ற தனது நூலில், இதைக் கேட்ட பெனாசீர், தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய, நதீம் தாஜ் அழுத்தம் கொடுப்பதாகச் சந்தேகித்தார். இந்தத் தற்கொலைத் தாக்குதல் காரர்களைப்பற்றி உறுதியாகத் தெரிந்தால், அவர்களை ஏன் கைது செய்யக் கூடாது என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த தாஜ், அது தனது உளவாளிகளைக் காட்டிக் கொடுக்கும் என்று கூறினார். அதற்கு பேனசீர், தனது பாதுகாப்பை மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்த அனைவருக்கும் முழுப் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கூறினார். ஐ எஸ் ஐ தலைவரும் முழு வீச்சில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார். என்று எழுதுகிறார்.

பேனசீரை கொல்ல ஏற்பாடு

ஜெனரல் தாஜ் - பேனசீர் சந்தித்த அதே நேரத்தில், அவரைக் கொல்வதற்கான இறுதி ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. பென்னட் ஜோன்ஸ் எழுதுகிறார், நள்ளிரவுக்குப் பிறகு, தலிபானைச் சேர்ந்த நஸ்ருல்லா, பதினைந்து வயதுக் குழந்தைகளான பிலால் மற்றும் இக்ரமுல்லாவுடன் ராவல்பிண்டியை அடைந்தார். இதற்கிடையில், மேலும் இரண்டு தலிபான்களான ஹசனைன் குல் மற்றும் ரஃபாக்கத் ஹுசைன் ஆகியோர், அன்று மாலை பேனசீர் பூட்டோ உரையாற்றவிருந்த ராவல்பிண்டியின் லியாகத் ஹுசைன் பூங்காவிற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அந்த நேரத்தில் பூங்காவின் மூன்று வாயில்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர்களை நிறுவி வந்தனர். ஆனால், நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில்தான் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததால், இது அவர்களின் திட்டத்தைப் பாதிக்காது என்று அவர்கள் திருப்தியுடன் திரும்பினர். அவர்கள் பிலாலுக்கு சில தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கியையும், இக்ரமுல்லாவுக்கு ஒரு கைக்குண்டையும் கொடுத்தனர்.

ஜிஹாதி பயிற்சியாளர்கள் எவ்வகைக் காலணிகளை அணிந்திருப்பர் என்று பாதுகாப்புப் படையினருக்குக் கற்பிக்கப்படுவதால், பயிற்சியாளரின் காலணிகளுக்குப் பதிலாக வேறு சாதாரணக் காலணிகளை அணியுமாறு ஹஸ்னைன் அறிவுறுத்தினார். அதை ஏற்று, அவர்கள் செருப்புகளை அணிந்தனர். நமாஸைப் படித்தபின், பேனசீர் பயன்படுத்துவார் என்று தான் நினைத்த வாயிலுக்கு ஹஸ்னைன் பிலாலை அழைத்துச் சென்றார்.

லியாகத் பூங்கா செல்லும் முன் ஹமீத் கர்சாயுடன் சந்திப்பு

பேனசீர் பூட்டோவின் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணையத்தின் தலைவரான ஹரால்டோ முனோஸ், பின்னர் எழுதிய கெட்டிங்க் அவே வித் மர்டர் என்ற புத்தகத்தில், ' பேனசீர், டிசம்பர் 27 காலை, எட்டரை மணிக்கு எழுந்தார். 9 மணிக்குக் காலை உணவு உண்டார். இரண்டரை மணி நேரம் கழித்து அவர் அமீன் ஃபஹீம் மற்றும் மக்கள் கட்சியின் முன்னாள் செனட்டர் ஒருவர் ஆகியோருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயைச் சந்திக்க சென்றார்.

கர்சாய் இஸ்லாமாபாத்தில் உள்ள செரினா ஹோட்டலின் நான்காவது மாடியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்த பிற்கு 1 மணிக்கு சர்தாரி ஹவுஸ் திரும்பினார். மதிய உணவை உண்டபிறகு, மாலையில் தனது சகாக்களுடன் லியாகத் பாகில் நிகழ்த்த வேண்டிய உரைக்கு இறுதி வடிவம் கொடுத்தார். பிற்பகலில், பேனசீர் தனது வாகன அணிவகுப்புடன் லியாகத் பாக் புறப்பட்டார்.

டொயோட்டா லேண்ட் குரூசரில் பிபிபியின் பாதுகாப்புத் தலைவரான தௌகிர் கைரா இந்த அணிவகுப்பின் முன்னணியில் இருந்தார். இதற்குப் பின்னால், பேனசீரின் வெள்ளை நிற லேண்ட் க்ரூசர் வந்தது. கைராவின் மற்ற இரண்டு வாகனங்கள் இருபுறமும் ஓடிக்கொண்டிருந்தன. ஜர்தாரி ஹவுஸிலிருந்து இரண்டு டொயோட்டா விகோ பிக்கப் ட்ரக்குகள் இந்த வாகனங்களுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்தன.

அவர்களுக்குப் பின்னால் ஜர்தாரி ஹவுஸின் கருப்பு மெர்சிடிஸ் பென்ஸ் இருந்தது, அது குண்டு துளைக்காதது. எனவே, தேவை ஏற்பட்டால், பேனசீர் அதைப் பயன்படுத்தலாம். பேனசீரின் காரில் இடதுபுறத்தில் டிரைவர் ஜாவேதுர் ரஹ்மான் மற்றும் வலதுபுறத்தில் மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் மேஜர் இம்தியாஸ் உசேன் ஆகியோர் இருந்தனர். நடு இருக்கையில், இடது பக்கம், பிபிபி மூத்த தலைவர் மக்தூம் அமீன் பாஹிம், வலது பக்கத்தில் பேனசீரின் அரசியல் செயலாளர் நஹீத் கான் இவர்களிடையே பேநஸீர் அமர்ந்திருந்தார்.

பாதுகாப்பு விதிகளில் அலட்சியம்

2.15 மணிக்கு, பேனசீரின் வாகன அணிவகுப்பு ஃபைசாபாத் சந்திப்பை அடைந்தது. அங்கிருந்து அவர்களின் பாதுகாப்பு ராவல்பிண்டி மாவட்ட காவல்துறையின் பொறுப்புக்கு வந்தது. 2.56-க்கு, பேனசீரின் வாகன அணிவகுப்பு வலதுபுறம் திரும்பி, மரி சால - லியாகத் சாலை சந்திக்கு வந்து லியாகத் பாகின் விஐபி பார்க்கிங் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. இதற்கிடையில், பேனசீர் எழுந்து நின்று, தனது லேண்ட் குரூசரின் கூரையின் திறப்பில் (எஸ்கேப் ஹட்ச்) இருந்து முகத்தைக் வெளிக்காட்டினார்.

அவர் மக்களை நோக்கிக் கையை அசைத்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார், அவருடைய வாகனம் மெதுவாக லியாகத் சாலையில் நகர்ந்தது.

அவரின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த எவரும் இவ்வாறு செய்வது ஆபத்தானது என்று எச்சரிக்கவில்லை. ஹெரால்டோ முன்யோஸ் தனது கெட்டிங் அவே வித் மர்டர் என்ற புத்தகத்தில், பிற்பகல் 3.16 மணியளவில், பேனசீரின் வாகன அணி வகுப்பு 5 முதல் 6 நிமிடங்கள் பார்க்கிங் பகுதியின் உள் வாயிலில் நிற்க வேண்டியிருந்தது, ஏனெனில் காவல்துறையினரிடம் வாயிலைத் திறக்க சாவி இல்லை. இதற்கிடையில், பேனசீர் தனது வாகனத்தில் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் நின்று கூரைத் திறப்பு மூலம் தனது முகத்தை வெளிக்காட்டினார். என்று எழுதுகிறார்.

ஒரே நொடியில் மூன்று குண்டுகள்

இதன் பின்னர், பேனசீர் பத்தாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் உரை நிகழ்த்தினார். அந்த உரையில், அவர் தனது தந்தையின் பெயரை 17 முறை நினைவு கூர்ந்தார். உரையின் முடிவில், பேனசீர் ஜிந்தாபாத் மற்றும் 'பேனசீர் வஜீரே ஆசம்' என்ற முழக்கங்கள் எதிரொலித்தன.

பிறகு பேனசீர் தனது காரில் அமர்ந்தார். அவரது ஆதரவாளர்கள் அவரைச் சுற்றிலும் சூழ்ந்ததால் அவரது கார் நீண்ட நேரம் நின்றது. கூட்டத்தைப் பார்த்த அவர், எழுந்து நின்று, தலை மற்றும் தோள்கள் திறப்பில் இருந்து தென்படுமாறு நின்றார். அந்த நேரம் மாலை 5.10 மணி. ஓவன் பென்னட் ஜோன்ஸ் எழுதுகிறார், "காலையிலிருந்து காத்திருக்கும் பிலால், தனது நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தார். அவர் முதலில் பேனசீரின் வாகனத்தின் முன் சென்று பின்னர் குறைவான மக்கள் இருந்த இடத்திற்கு அருகில் சென்றார். அவர் தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து பேனசீரின் தலையைக் குறி வைத்தார்.

ஒரு காவலர் பிலாலை நிறுத்த முயன்றார். அவர் சிறிது தூரத்தில் இருந்ததால், அவர் கையை எட்டித் தொட்டார். அதற்குள், பிலால் மூன்று முறை சுட்டார். மூன்றாவது புல்லட்டை சுட்டவுடன், பேனசீர் தனது வாகனத்தின் இருக்கையில் கூரைத் திறப்பில் இருந்து ஒரு கல் போல விழுந்தார். அவர் கீழே விழுந்தவுடன் பிலால் தனது தற்கொலை குண்டையும் வெடிக்கச் செய்தார்.'

கெட்டிங் அவே வித் மர்டர் நூலின் ஆசிரியர் ஹெரால்டோ முன்யோஸ் எழுதுகிறார், 'பேனசீரின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த நஹீத் கான் என்னிடம் சொன்னார், மூன்று துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்டவுடன், பேனசீர் கீழே விழுந்து, அவரது தலையின் வலது பகுதி எனது மடியில் விழுந்தது. அவரது தலை மற்றும் காதுகளிலிருந்து ரத்தம் கொட்டியது. என் உடைகள் அனைத்தும் அவரது இரத்தத்தால் நனைந்தன' என்றார். பேனசீரின் இடதுபுறத்தில் அமர்ந்திருந்த மக்தூம் அமீன் ஃபாஹிம், பேனசீர் வீழ்ந்தபோது, அவரது உடலில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறினார். அவரது வாகனத்தில் வேறு யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார்'

காரின் நான்கு டயர்களும் வெடித்தன

அந்த இடத்தில், ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பு காரணமாக பேனசீரின் காரின் நான்கு டயர்களும் வெடித்தன. டிரைவர் காரை இரும்பு ரிம்மிலேயே அவரசமாக ராவல்பிண்டி பொது மருத்துவமனை நோக்கி ஓட்டிச் சென்றார். லியாகத் சாலையில் 300 மீட்டர் தூரம் கடந்தபின், அதே நிலையில் காரை இடது பக்கம் திருப்பினார். கார் அதே நிலையில் சில கிலோமீட்டர் ஓடியது. லேண்ட் க்ரூஸர் கார் ஒரு யு-டர்ன் எடுக்க முயன்றபோது, அது நின்றுவிட்டது, மேலும் தொடர முடியவில்லை.

சம்பவ இடத்தில் இருந்த இரண்டு காமண்டோ வாகனங்கள் பேனசீரின் வாகனத்தைப் பின்தொடர முயன்றன, ஆனால் இறந்த உடல்கள் மற்றும் முன்னால் காயமடைந்த மக்கள் காரணமாக அவற்றால் நகர முடியவில்லை.

நஹீத் கான் ஓவன் பென்னட் ஜோன்ஸிடம், "பேனசீரை டாக்சியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறினார். காவல்துறையினரும் அங்கு எங்கும் காணப்படவில்லை. டாக்சிக்காக நாங்கள் காத்திருந்தோம். இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் ஒரு ஜீப் வந்தது. ஜீப்பை நிறுத்தி அந்த ஜீப்பில் மருத்துவமனைக்குச் சென்றோம். அந்த ஜீப் பேனசீரின் செய்தித் தொடர்பாளர் ஷெர்ரி ரெஹ்மானுடையதாகும். தாக்குதலுக்கு 34 நிமிடங்கள் கழித்து அவர்கள் மருத்துவமனையை அடைந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன.

பேனசீரின் தொண்டையில் குழாய்கள் செலுத்தப்பட்டன

மருத்துவமனையைச் சென்றடைந்ததும், பேனசீர் ஒரு ஸ்ட்ரெச்சரில் பார்க்கிங் பகுதிக்குள் எடுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு துடிப்பு இல்லை, சுவாசிக்கவில்லை. அவரது கண்கள் நிலை குத்தி நின்றிருந்தன. ஒளிரும் விளக்கை அடித்தும் கூட அவற்றில் எந்த அசைவும் இல்லை. அவரது தலையில் ஏற்பட்ட காயத்தில் தொடர்ந்து இரத்தம் வழிந்து அங்கிருந்து ஒரு வெள்ளை பொருள் வெளியே வந்தது.

அவருக்கு உயிர் இல்லை என்பது தெரிந்திருந்தும், டாக்டர் சயீதா யாஸ்மின் அவரைப் பிழைக்க வைக்க முயன்றார். சிறிது நேரத்தில், டாக்டர் ஔரங்கசீப் கானும் அவருக்கு உதவ வந்தார். ஒரு நிமிடத்திற்குள், அவரது தொண்டையில் ஒரு கீறல் போடப்பட்டு, ஒரு குழாய் செருகப்பட்டது. 5.50 மணிக்கு, மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பேராசிரியர் மொசத்திக் கான் அங்கு வந்து பொறுப்பேற்றார். பேனசீரின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டது.

தாக்குதல் நடந்து ஐம்பது நிமிடங்கள் கழித்து, ஆறு மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மருத்துவர் அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார். பேராசிரியர் முசத்திக் கான் மார்பில் ஒரு கீறல் செய்து தனது கைகளால் இதயத்தை மசாஜ் செய்யத் தொடங்கினார். ஆனால் அவரது உடல் அசையாமல் இருந்தது. 6.16 மணிக்கு பேனசீர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரின் துப்பட்டா குறித்து இன்னும் தகவலில்லை

ஆண்கள் அனைவரும் ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். டாக்டர் குத்சியா அஞ்சும் குரேஷி மற்றும் செவிலியர்கள் அவரது உடலை சுத்தம் செய்து தலையில் கட்டு கட்டினர். ரத்தத்தில் நனைத்த அவரது உடைகள் அகற்றப்பட்டு மருத்துவமனை ஆடைகள் அணிவிக்கப்பட்டன. பேனசீர் மருத்துவமனை கொண்டுவரப்பட்டபோது அவரது உடலில் துப்பாட்டா இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை, அந்த துப்பட்டா எங்கு சென்றது என்று தெரியவில்லை. அவரது இறப்பு சான்றிதழ் எண் 202877 இல், மரணத்திற்கான காரணம் என்ற இடத்தில், இது பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி செய்யப்படும் என்று எழுதப்பட்டது. மூன்று முறை, டாக்டர் முசத்திக் கான் காவல்துறைத் தலைவர் சவுத் அஜீஸிடமிருந்து பிரேத பரிசோதனைக்கு அனுமதி கோரினார், ஆனால் அவர் அதை மூன்று முறையும் மறுத்துவிட்டார்.

பேனசீரின் குடும்பத்தினரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. பேனசீரின் மரணம் மருத்துவமனைக்கு வெளியே அறிவிக்கப்பட்டபோது, அங்கே நின்றிருந்த கூட்டத்திலிருந்து ஒரு பெருங்கூச்சல் எழுந்தது. மற்றொரு பூட்டோவும் வன் மரணத்தைத் தழுவியதால் அவர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். பேனசீரின் தந்தை ஜுல்ஃபிகர் அலி பூட்டோவை இராணுவ அரசாங்கம் தூக்கிலிட்டது. அவரது சகோதரர்களில் ஒருவரான ஷாஹனாவாஸ் விஷத்தால் இறந்தார், மற்றொரு சகோதரர் முர்தாசா சுடப்பட்டே இறந்தார்.

உடல் கூறாய்வுக்கு ஜர்தாரி அனுமதி மறுப்பு இரவு 10.35 மணியளவில், பேனசீரின் உடல் மர சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அருகிலுள்ள சக்லாலா விமான தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் டிசம்பர் 28 மதியம் 1 மணியளவில் அவரது கணவர் ஆசிப் அலி ஜர்தாரியிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர் துபாயில் இருந்து சில நிமிடங்களுக்கு முன்பு தான் அங்கு வந்திருந்தார்.

ஜர்தாரி பாகிஸ்தான் வந்ததும், பேனசீரின் உடற்கூராய்வுக்கு அவரிடம் அனுமதி கோரப்பட்டது, ஆனால் அவர் அனுமதி தரவில்லை. 28 டிசம்பர் 2007 அன்று, பேனசீர் பூட்டோவின் உடல் லர்கானாவில் உள்ள கரி குதாபக்ஷில் அடக்கம் செய்யப்பட்டது.

பேனசீர் அவரது மரணத்தை முன்னமே அறிந்திருந்தாரா?

பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கு முன்பு, அவர் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஆஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடன் விமானத்தில் அமெரிக்க தூதர் ஜால்மே



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.