head


ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

|Sunday, 10th January 2021|Political| Page Views: 1

இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த பிரதிநிதிகள் இறுதியாக ஒரு வணிக ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்த காலத்துடன் ஒப்பிடும் போது, வணிகச் செயற்பாடுகள் உரிய அனுமதிகளைப் பெறுவதில் பல உத்தியோகபூர்வ தடைகளைச் சந்திக்கப் போகின்றன என்பது தெளிவாகின்றது.

ஜனவரி முதலாம் திகதி, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பெரிய நிதிச் சேவைகள் தமது உற்பத்திப் பொருட்களை ஐரோப்பாவில் விற்பனை செய்யும் போது, அவற்றுக்கு எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன போன்ற முக்கியமான விடயங்கள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படாத நிலையையே அவதானிக்க முடிகின்றது.

பிரெக்சிற் உண்மையில் எதனைக் குறிக்கிறது? பிரெக்சிற் (Brexit) அல்லது பிரித்தானியாவின் வெளியேற்றம் என்பது இரண்டாம் உலகப் போரின் காரணமாக சாம்பல் மேடாகிப்போன ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட பொருண்மிய மற்றும் அரசியல் கூட்டிலிருந்து 47 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியம் வெளியேறுகின்ற செயன்முறையைக் குறிக்கின்றது.

‘வெளியேறுவதற்கான வாக்கு” எனப்பெயரிடப்பட்ட பரப்புரை 52 – 48 என்ற வீதத்தால் 2016 ஜூன் மாத்தில் சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து ரஷ்யாவினதும், துருக்கியினதும் எல்லை வரை நீண்டிருக்கின்ற நாடுகளில் வாழும் 450 மில்லியன் மக்களைக் குடிமக்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முதல் நாடாக ஐக்கிய இராச்சியம் மாறியிருக்கிறது.

ஜனவரி 31ஆம் திகதி நடைபெறுகின்ற பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ வெளியேற்றம், 66 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாடு, தான் ஏற்கனவே இழந்துவிட்ட இறைமையை மீளப்பெறுகின்ற ஓர் உன்னதமான நிகழ்வாக அதன் ஆதரவாளர்களால் புகழப்பட்டது.

அதே வேளையில, ஐரோப்பிய நாடுகள் நடுவே நடைபெற்று வந்த ஒருங்கிணைப்புக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்றும், ஒன்றியத்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையே காணப்படும் ஒரேயொரு நில எல்லையாக விளங்குகின்ற அயர்லாந்தில் முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத பொருண்மிய சேதத்தையும் புதிதாக மோதல்கள் உருவாகக் கூடிய ஆபத்தான சூழமைவையும் இது தோற்றுவித்திருக்கிறது என்று இச்செயன்முறையை எதிர்ப்பவர்கள் கருதுகிறார்கள்.

அதன் உத்தியோகபூர்வ வெளியேற்றத்தைத் தொடர்ந்து, வணிக செயற்பாட்டிலிருந்து மாணவர்களைப் பரிமாறும் செயற்பாடுகள் வரை மிக நெருக்கமாகப் பணியாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட விதிமுறைகளை இலண்டன் மிக நெருக்கமாகக் கடைப்பிடித்து வந்த போதிலும், இந்த மாற்றத்துக்கான காலம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிறது.

புதிய ஒப்பந்தம் எப்படிப்பட்ட விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது?

இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் தமது வாணிபப் பொருட்கள் தங்குதடையின்றி நகர்வதை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு தரப்புகளும் மிகவும் சிக்கல் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தியிருக்கின்றன.

வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைப் பார்க்கும் போது, மொத்தத்தில் 900 பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த இப்பொருட்களின் வாணிபச் செயற்பாட்டில் அரைப்பங்குக்கு வரியோ அன்றேல் கோட்டா ஒழுங்குமுறையோ விதிக்கப்படாது என்பது தெளிவாகிறது.

இது இவ்வாறு இருப்பினும் ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்கள், ஆயப்பகுதியுட்பட்ட (சுங்கப்பகுதி) வேறு சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் என்பதால், இவை தொடர்பான பல ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக இவற்றுக்கு எதிர்காலத்தில் அதிகமான நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்னும் விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த வருடம் ஒப்பமிடப்பட்ட வெளியேற்றத்துக்கான ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட இணக்கப்பாடு கைச்சாத்திடப்பட்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பு நாடாக இருக்கின்ற அயர்லாந்துக்கும், பிரித்தானியாவின் ஒரு மாகாணமாக இருக்கின்ற வட அயர்லாந்துக்கும் இடையே உள்ள, இலகுவில் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய எல்லையில் அளவுக்கதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை அந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.

இணக்கப்பாட்டின் மூன்றாவது முக்கிய விடயம் பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே மீன்பிடி ஒதுக்கீடு தொடர்பான விடயங்களாகும்.

எப்படிப்பட்ட விடயங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன?

பல விடயங்களைப் பொறுத்தளவில் பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கு முன்னர் இருந்த அதே அளவு ஒத்துழைப்பை தற்போதைய இணக்கப்பாடு முன்மொழியவில்லை.

ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதியின் முதுகெலும்பாக விளங்குகின்ற நிதி மற்றும் வணிக சேவைகள் சிறிய அளவிலேயே உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, இலண்டன் மாநகரத்தைப் பொறுத்தளவில் நிறுவனங்கள் தனிச்சந்தைக்குள் (single market) தமது சேவைகளை விற்பனை செய்வதற்கான எந்தவிதமான கட்டமைப்பு தொடர்பான முடிவும் எடுக்கப்படவில்லை. நிதிச் சேவைகளைப் பொறுத்தவரையில் சாதாரண நடைமுறைகளே பின்பற்றப்பட இருக்கின்றன. அதன் பொருள் என்னவென்றால், சந்தையைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவித கடப்பாடும் இக்குறிப்பிட்ட இணக்கப்பாட்டில் அடையப்படவில்லை.

வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் இதே நிலையே நீடிக்கின்றது. அதே வேளையில் போக்குவரத்து, சக்தி, சாதாரண மக்கள்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.