ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்!
|Monday, 11th January 2021|Political|
Page Views: 1
|
|
ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்படவேண்டும் என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஜனநாயகத்தில் ஒழுக்கம் மிகுந்தவர்களாக இருப்பவர்கள் இப்படி நடந்து கொண்டது ஆச்சரியம் அளிப்பதாக கூறினார்.
சமூகம், ஜனநாயகம் மற்றும் பொது நன்மைக்கு எதிராக அவர்களாகவே ஒரு பாதையை தேர்தெடுத்து கொள்கிறார்கள் என்றும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.
|
|