head


பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசி!

|Tuesday, 12th January 2021|General| Page Views: 1

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் ஊயயெடந 5 தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள தகவலை வெளியிட்டிருக்கிறார்.

வத்திக்கானின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 84 வயதான பாப்பரசரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது. நெறிமுறைப்படி அனைவருமே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தான் உணர்வதாக தெரிவித்திருக்கின்ற பாப்பரசர், தடுப்பூசி ஏற்றாதவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்துடன் அடுத்தவரது நலனையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர் – என்றும் கூறியிருக்கிறார். புனித பாப்பரசரின் தனிப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான குயடிசணைழை ளுழஉஉழசளi கொரோனா வைரஸ{டன் தொடர்புடைய குழப்பமான நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவலை வத்திக்கான் செய்தித் தாள் டு’ழுளளநசஎயவழசந சுழஅயழெ வெளியிட்டிருக்கிறது.

78 வயதான மருத்துவர் பொதுவான நோய்களுடன் டிசெம்பர் 26 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.அவருக்கு வைரஸ் தொடர்பான பாதிப்புகள் காணப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மருத்துவர் கடைசியாக பாப்பரசருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவரவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன.இந்த நிலையிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.