உலக நாடுகளுக்கு வழங்கப்படும் ரஷ்ய தடுப்பு மருந்து!
|Tuesday, 12th January 2021|General|
Page Views: 1
|
|
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்து உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.
இது மேலைநாட்டுத் தடுப்பு மருந்துகளான ஆஸ்ட்ராசெனேகா, பைசர், பயான்டெக் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கு இணையாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பின் உதவியோடு ரஷ்யா ஒன்றரை கோடி உலக மக்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி உள்ளதாக கிரெம்லின் வட்டாரம் தகவல் அளித்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கல் மோர்சாக்கோ இதுகுறித்து கூறுகையில் ரஷ்யாவில் 8 லட்சம் ரஷ்யர்களுக்கு இந்தத் தடுப்புமருந்து இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 34 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் அதில் 62 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரம் கூறியுள்ளது.
ஸ்பூட்நிக் ஐந்து தடுப்பு மருந்து மூன்றுகட்ட சோதனைகளை முடித்து வெற்றிபெற்ற தடுப்பு மருந்தா என்ற கேள்வி இன்னும் பல இடத்தில் உள்ளது. ஆனால் மேலை நாட்டு மருந்துகளை நம்பாமல் சீனாவும் ரஷ்யாவும் தங்களது சொந்த தயாரிப்புகளை இதுவரை பயன்படுத்தி பலனடைந்து வருகின்றன.
|
|