அவுஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!
|Tuesday, 12th January 2021|Natural Disaster|
Page Views: 1
|
|
அவுஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள லூசிண்டேலில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
இதனால் இங்கிருக்கும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பரவும் போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக பின்பற்றுமாறு குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 16,000 ஹெக்டேர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ள நிலையில், தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
|