head


சீரம் நிறுவனத்திடம் 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி வாங்கிட மத்திய அரசு முடிவு!

|Tuesday, 12th January 2021|| Page Views: 1

சீரம் நிறுவனத்திடமிருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வரும் 16ம் தேதி முதல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட்டம் துவங்குகிறது.

இந்நிலையில் சீரம் நிறுவனத்திடமிருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200க்கு கிடைக்கும் என தற்போது சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.