head


வர்த்தக உறவில் பிரச்னை இந்தியா: அமெரிக்கா பேச்சு!

|Tuesday, 12th January 2021|| Page Views: 1

வர்த்தக உறவில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க, இந்தியாவும் அமெரிக்காவும், தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, அமெரிக்கா பார்லிமென்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு, சிறந்த முறையில் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக, இருநாட்டு வர்த்தக உறவில், தொடர்ந்து பிரச்னைகள் நிலவி வருகின்றன.

வளர்ந்து வரும் நாடு என்ற அடிப்படையில், இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு வர்த்தக அந்தஸ்தை, 2019ல், அதிபர் டொனால்டு டிரம்ப், ரத்து செய்தார்.

அந்த சிறப்பு அந்தஸ்தின் கீழ், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும், சில குறிப்பிட்ட உள்நாட்டு பொருட்களுக்கு, வரி சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், அது நீக்கப்பட்டதால், இந்தியாவிற்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பு வர்த்தக உறவு மோசமடைந்தது.இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு குறித்து, அமெரிக்க பார்லிமென்டின் ஆராய்ச்சி பிரிவு, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வர்த்தக உறவில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க, இந்தியாவும் அமெரிக்காவும், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன.

குறிப்பாக, இந்திய சந்தைகளில், அமெரிக்க வேளாண் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும் பேச்சு நடந்து வருகிறது. இதில், சுமுக தீர்வு எட்டப்பட்டால், ஜி.எஸ்.பி., திட்டத்தின்கீழ், இந்தியாவுக்கு சிறப்பு வர்த்தக அந்தஸ்து மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. இருதரப்பு பேச்சுகள் தொடர்பான தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.