head


அரசியல் இலாபங்களுக்காக தமிழ் இளைஞர்களை பயன்படுத்தாதீர்!

|Wednesday, 13th January 2021|Political| Page Views: 1

அரசியல் இலாபங்களுக்காக தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை தியாகம் செய்ய வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தமிழ் அரசியல் வாதிகளை வலியுறுத்தியுள்ளார். இன்றைய இளைஞர்கள் வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் மட்டுமே விரும்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களைப் பயன்படுத்துவதைக் கண்டித்த அவர், ஒரு நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆரம்பித்த ஹர்த்தால் குறித்தும் கருத்துக் கூறினார். தமிழ் அரசியல் தலைமை இளைஞர்களை தமது சொந்த அரசியல் குறிக்கோள்களுக்காக முரண்பாடுகளை முழு வீச்சான மோதல்களாக மாற்ற வேண்டாம் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.