சமூக வலைத்தளங்களிலிருந்து ஹாரி-மேகன் விலகல்!
|Wednesday, 13th January 2021|General|
Page Views: 1
|
|
ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி, மேகன் ஆகியோர் விலகியுள்ளனர்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகினர்.
தற்போது இந்த தம்பதியினர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அறக்கட்டளை மூலம் மக்கள் சேவை பணிகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டி உள்ளதால் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
|
|