மத்திய உள்துறை செயலருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!
|Wednesday, 13th January 2021||
Page Views: 1
|
|
5 மாநில சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக, மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்கம் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தலில் துணை ராணுவப்படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லாவுடன், தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|
|