head


அமைதியான முறையில் தீர்வு: ராணுவ தளபதி விருப்பம்!

|Wednesday, 13th January 2021|| Page Views: 1

எல்லை பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வு ஏற்படுவதையே விரும்புகிறோம் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி நரவானே கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை சேர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை, பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதத்தை நாம் சகித்து கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கையாக, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிலடி கொடுக்க நமக்கு உரிமை உள்ளது. எல்லையை தாண்டி, இந்த செய்தி தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது.பேச்சுவார்த்தையுடன் சவால்களையும் சந்தித்தோம்.கொரோனா அச்சுறுத்தல் மற்றும் வடக்கு எல்லை சூழ்நிலை ஆகியவை முக்கிய சவாலாக இருந்தது. வடக்கு எல்லையில், நாம் அதிகபட்ச உஷார் நிலையையில் இருந்தோம். அமைதியான தீர்வையே விரும்புகிறோம். அதேநேரத்தில், எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க, ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மாற்றுவதற்கான விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு சூழ்நிலை மேம்பட்டுள்ளது. நாகலாந்தில், என்எஸ்சிஎன் - கே அமைப்பு மட்டும் அமைதி நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை. மியான்மரில் மறைந்துள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் சரண் அடைவதன் மூலம் அவர்களும் அமைதி பாதைக்கு திரும்புவார்கள்.

மிசோரமில் வன்முறை ஏதும் இல்லை. மணிப்பூரில் ஒன்று அல்லது இரண்டு அமைப்புகள் மட்டுமே வன்முறையில் ஈடுபடுகின்றன. அசாமில் முற்றிலும் அமைதி திரும்பியுள்ளது. கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு சூழ்நிலை வடகிழக்கு மாநிலங்களில் மேம்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.