head


வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: ஆராய குழு அமைத்தது கோர்ட்!

|Wednesday, 13th January 2021|| Page Views: 1

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த தடை தொடரும் என தெரிவித்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், 40 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிரச்னைக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஏழு சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இதற்கிடையே, 'மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை' எனக் கூறி, தி.மு.க., - எம்.பி., சிவா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி., மனோஜ் ஜா உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வல்லுநர் குழு இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், எஸ். போபண்ணா, ஆர்.எஸ்.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது. அப்போது, 'வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பது கவலையளிக்கிறது.

இது தொடர்பாக, அரசு தெரிவிக்கும் விளக்கம், ஏற்கும்படியாக இல்லை. இந்த சட்டங்களை, அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும். இந்த சட்டங்களை அமல்படுத்த, அரசு ஏன் அவசரப்படுகிறது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு நேற்று (12 ம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில்; , வேளாண் சட்ட விவகாரத்தில் கட்டாயம் மாற்று தீர்வு தேவைப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விவகாரம் கவலையளிக்கிறது. விவசாய நிலங்களை விற்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவை பிறப்பிக்க உள்ளோம்.

பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.கட்டாயம் குழு அமைப்போம். அது நீதிமன்ற அலுவல்களின் ஒரு பகுதியாக இருக்கும். அரசியல் சார்பில்லாமல் குழு அமைக்கப்படும்.சுமூக தீர்வு காண விரும்புவோர், தங்களது குழு அமைப்பததை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும். பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசியல் சார்பற்ற குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். என உத்தரவிட்டனர்.

விசாரணையின் போது, விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில், பாரதிய கிஷான் சங்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் மன்,சேட்கெரி சங்கிதனா அமைப்பை சேர்ந்த அனில் கன்வாட் ஆகியோரும், பிரமோத் குமார் ஜோஷி மற்றும் விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், இது தெடார்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு 10 நாட்களுக்குள் முதல் கூட்டத்தை கூட்டி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.