head


மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாண மூவரடங்கிய குழு நியமனம்!

|Sunday, 24th January 2021|Political| Page Views: 23

இந்திய கடற்தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளைக் கொண்ட இக்குழு, கடற்தொழில் அமைச்சு திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற்படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி இந்தியக் கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயல்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான பரந்துரைகளை கடற்தொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது.

இதுதொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியக் கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயல்பாடுகளால் இலங்கைக் கடற்தொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன், இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றது. இதனால் இந்த சட்ட விரோதச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கைக் கடற்தொழிலாளர்களால் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துரதிஷ்ட சம்பவத்தின் காரணமாக நான்கு இந்தியக் கடற்தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இவ்வாறான சூழலில் எல்லை தாண்டிய செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.