head


அரசு தொடர்பான பரிவர்த்தனையில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்!

|Thursday, 25th February 2021|| Page Views: 2

இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி அமைச்சர் நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,அரசு வணிகத்தை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கு வசதி, அரசின் சமூகத் துறை முயற்சிகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வசதி ஏற்படுத்துவது போன்றவற்றில் இனி தனியார் வங்கிகள் சம பங்களிப்பாளர்களாக இருப்பார்கள்.என கூறியுள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கித் துறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் தனியார் துறை வங்கிகள் முன்னணியில் இருக்கின்றன. தற்போது அவை இந்திய பொருளாதார வளர்ச்சியில் சமபங்கு வகிக்கும்.

அரசு வணிகங்களை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதன் மூலம், அவற்றிற்கு அங்கீகாரம் வழங்க ரிசர்வ் வங்கிக்கு இனி எந்த தடையும் இல்லை. அரசாங்கம் தனது முடிவை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளது. என கூறப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.