head


மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதல்வர் பழனிசாமி உறுதி!

|Sunday, 28th February 2021|Political| Page Views: 3

வரும் சட்டசபை தேர்தலில் பெரும்பன்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் பழனிசாமி பேசியதாவது: எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும், பழனிசாமி ஆட்சி ஒரு மாதம் தான் இருக்கும்; 3 மாதங்கள் தான் நீடிக்கும் என உண்மைக்கு மாறான பிரசாரங்களை செய்தனர்.

அதையெல்லாம் முறியடித்து நான்காண்டு காலம் நிறைவு பெற்று, 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

நான் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம் தமிழகம் இன்று, ‛வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற அளவுக்கு ஏற்றம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியினர் கூட மூக்கின் மேல் விரலை வைத்து பாராட்டுகிற அரசு அதிமுக அரசு என்பதை எடுத்து காட்டியுள்ளோம்.

இந்த சிறப்புமிகு ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு எனது நன்றி. அதேபோல், அமமைச்சர்கள், தங்கள் துறைகளில் திறமையாக செயல்பட்டு அதன் மூலம் தேசிய அளவில் விருதுகளை பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து அமைச்சர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு மனமார நன்றி தெரிவித்து கொள்கிறேன்.சபாநாயகர், துணை சபாநாயகர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி.

நான் முதல்வராக பதவியேற்ற காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு சாதனைகளை புரிந்து, சாதனை படைத்த அரசாக இந்த அரசு திகழ்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவுகளை நனவாக்குகின்ற விதமாக வரும் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.

எங்களுடடைய கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

சபாநாயகர் தனபால் பேசும்போது: சட்டசபைக்கு அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல்வர் பழனிசாமி தான். கவர்னர் மீதான உரை 23 நாட்கள் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 16 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது.

2021ம் ஆண்டு சட்டசபை தொடரை புறக்கணித்த போதும், எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.