head


நீரியல்வளப் பூங்கா திறந்துவைப்பு!

|Monday, 01st March 2021|General| Page Views: 4

நோனாகம வோடர்பார்க் நீரியல்வளப் பூங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று முன் தினம்; திறந்துவைக்கப்பட்டது. தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ருஹணு சுற்றுலா பணியகம் மற்றும் அம்பலந்தொட பிரதேச சபையின் நிதி மற்றும் வளங்களை பயன்படுத்தி ரூபாய் 58 இலட்சம் செலவில் இந்த நீரியல்வளப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அம்பலந்தொட பிரதேச சபையின் தலைவர் எம்.ஆர்.பி.தர்ஷன சஞ்ஜீவ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கதிர்காமம்-ஹாஃப்வே திட்டத்தின் மற்றொரு கட்டமாக இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொதுமக்களை கவரும் பல இடங்கள் காணப்படுகின்றன.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் டீ.வீ.நானக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, தென் மாகாண ஆளுநர் விலி கமகே, தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட, அம்பலந்தொட பிரதேச சபை தலைவர் எம்.ஆர்.பீ.தர்ஷன சஞ்ஜீவ உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.