head


இந்தியாவில் தற்காலிகமாக ஊரடங்கு பிறப்பிக்க அமெரிக்க மருத்துவர் யோசனை!

|Sunday, 02nd May 2021|Political| Page Views: 1

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் தற்காலிக ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி பவுசி யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து, ஆங்கில நாளிதழுக்கு அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரும், பெருந்தொற்று தடுப்பு நிபுணருமான அந்தோணி பவுசி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இந்திய அரசு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தற்போது, இந்தியா கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறது. நாடு முழுவதும் தற்காலிகமாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை உடனடி தேவையாக பெற்று, அதனை விநியோகிக்க வேண்டும்.

சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, அவர்கள் முழு ஊரடங்கை பிறப்பித்தனர். இந்தியாவில் 6 மாத காலம் அளவுக்கு ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை. பரவலை தடுக்க தற்காலிக ஊரடங்கை பிறப்பித்தாலே போதுமானது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

சீனாவில் மருத்துவ தேவை அதிகரித்த சில நாட்களிலேயே அவர்கள் மருத்துவமனைகள், அவசர மையங்கள் ஆகியவற்றை கட்டி முடித்தனர். அதே வழியை இந்தியா பின்பற்ற வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் மத்திய அரசு அணி திரட்ட வேண்டும். இந்த நேரத்தில் ராணுவத்தின் மூலம் நாம் என்ன உதவியை பெற முடியுமோ அதனை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.