head


ராணுவத்துக்கு அவசரகால நிதி அதிகாரம்: ராஜ்நாத் சிங்!

|Sunday, 02nd May 2021|Political| Page Views: 1

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட, ராணுவத்துக்கு அவசரகால நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இது குறித்து ராஜ்நாத்சிங் கூறியதாவது, கொரோனா பரவலுக்கு எதிராக, ராணுவம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும், தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது உட்பட பல்வேறு பணிகளில், ராணுவத்தினர் ஈடுபட்டுஉள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில், தங்கள் நடவடிக்கைகளை வேகப்படுத்த ராணுவத்துக்கு அவசர கால நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது.

கமாண்டர்கள், ஏரியா கமாண்டர்கள், 50 லட்ச ரூபாய் வரையும், டிவிஷன் கமாண்டர்கள், ஏரியா துணை கமாண்டர்கள், 20 லட்சம் ரூபாய் வரையும், செலவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையொஜெனிக் கன்டெய்னர்களை, வெளிநாடுகளில் இருந்து எடுத்து வர, போர்க்கப்பல்களை கடற்படை ஈடுபடுத்தியுள்ளது.

முதல்கட்டமாக, மேற்காசிய நாடான பக்ரைன், தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து ஆகியவற்றில் இருந்து, ஆக்சிஜன் கண்டெய்னர்களை, கடற்படை கப்பல்கள் எடுத்து வர உள்ளதாக, கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.