head


சிறைச்சாலைகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்!

|Monday, 03rd May 2021|General| Page Views: 1

கொரோனா வைரஸ் தொற்று சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போதைய நிலையில் சிறைச்சாலைகளினுள் 246 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், சிறைச்சாலைகளில் தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளுக்கு புதிதாக வரும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.