head


வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தரவு!

|Monday, 03rd May 2021|| Page Views: 1

வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்த தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அசாமில் பா.ஜ., மேவங்கத்தில் மம்தாவின் திரிணாமுல், கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு முன்னிலை விவரம் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடித்து வெற்றியை பிடிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.

தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று இருப்பதால் கூட்டமாக கூடக்கூடாது என்றும், கொண்டாட்டம் இருக்கக்கூடாது என்றும் ஏற்கனவே தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஆங்காங்கே கொண்டாட்டம் நடப்பதால் இன்றும் தேர்தல் கமிஷன் தலைமை செயலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் கொரோனா வழிமுறை கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.