head


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 4 வீரர்கள்!

|Tuesday, 04th May 2021|General| Page Views: 1

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பினர். 1968-ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்றுவிட்டு அமெரிக்காவின் அப்பல்லோ 8 விண்கலம் விண்வெளி வீரர்களுடன் அதிகாலையில் இருளில் பூமிக்குத் திரும்பியது. அதன்பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருளில் தரையிறங்கியது இப்போதுதான்.

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நிர்மாணித்துள்ளன. இந்த விண்வெளி நிலையத்திலிருந்து 4 வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர். அந்த விண்கலம் பாராசூட் உதவியுடன் மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது.

நான்கு விண்வெளி வீரர்களில் மூவர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜப்பானியர். நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த நவம்பரில் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவர்கள், தமது 167 நாள்கள் ஆய்வுப் பணியை நிறைவு செய்த பின்னர் பூமிக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 பேர் ஆய்வுப் பணியில் உள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.