head


கொரோனா தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

|Tuesday, 04th May 2021|| Page Views: 1

சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோருடன், ஸ்டாலின் நேற்று தன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

பின், அதிகாரிகளுக்கு, அவர் பிறப்பித்த உத்தரவுகள்: கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, எவ்வித தொய்வுமின்றி, முழு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு, சென்னையில் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.