head


ஆந்திராவில் 14 நாட்களுக்கு மே 5 முதல் பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு!

|Tuesday, 04th May 2021|| Page Views: 1

ஆந்திராவில் மே 5 முதல் 14 நாட்களுக்கு மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்தும் முயற்சியாக பொதுமுடக்க நேரங்களை நீட்டிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும், அதன் பிறகு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்துவது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்க உத்தரவு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.