head


தடுப்பூசி தேசியவாதத்தை நிராகரிக்க சீன ஜனாதிபதி அழைப்பு !

|Monday, 24th May 2021|Political| Page Views: 1

சீனாவினால் இயன்றளவுக்கு சிறப்பான முறையில் கூடுதலானளவுக்கு கொவிட் –19 தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கப்போவதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தடுப்பபூசிகளை கூடுதலான அளவுக்கு கட்டுப்படியாகக்கூடியதாகவும் இலகுவாகவும் பெறுவதை உறுதிசெய்துகொள்வதற்கு தடுப்பூசித் தேசியவாதத்தை ( Vaccine Nationalism ) நிராகரிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஜி 20 அமைப்பின் தலைமைத்துவத்தை தற்போது வகிக்கும் இத்தாலியும் ஐரோப்பிய ஆணைக்குழுவும் கூட்டாக ஏற்பாடுசெய்த உலக சுகாதார உச்சிமகாநாட்டில் வீடியோ மூலமாக மே 22 சீன ஜனாதிபதி உரையாற்றினார்.

தடுப்பூசி தேசியவாதத்தை நிராகரித்தல்

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் கூடுதலான இலகுவாகவும் கட்டுப்படியாகக்கூடிய அளவிலும் தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதிசெய்யுமுகமாக தடுப்பூசி தயாரிப்பு ஆற்றல் மற்றும் விநியோகம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதும் தடுப்பூசி தேசியவாதத்தை நிராகரிக்கவேண்டியதும் எமக்கு அவசியமானதாகும்” என்று கூறிய சி ஜின்பிங் நோய்த்தடுப்பு ஆற்றல் இடைவெளியை நிரவுவதற்கு நேர்மையாகவும் ஒப்புரவான முறையிலும் நடந்துகொள்ளவேண்டும் அழைப்பு விடுத்தார்

ஏற்கெனவே உலகிற்கு 30 கோடி டோஸ்கள் தடுப்பூசிகளை வழங்கிவிட்ட சீனாவினால் அதன் ஆற்றலுக்கு இசைவான முறையில் மேலும் தடுப்பூசிகளை வழங்கமுடியும் என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்பங்களை ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு கைமாற்றுவதிலும் அவற்றுடன் கூட்டுத்தயாரிப்பில் ஈடுபடுவதிலும் சீன தடுப்பூசி கம்பனிகளுக்கு ஆதரவளிக்கப்போவததாகவும் ஜனாதிபதி உறுதிளித்தார். ” கொவிட் –19 தடுப்பூசிகள் மீதான பலமைச்சொத்துடைமை உரிமைகளை கைவிடுவதற்கான ஆதரவை ஏறகெனவே அறிவித்துவிட்ட சீனா இது விடயத்தில் நேரகாலத்தோடு ஒரு தீர்மானத்தை எடுப்பதில் உலக சுகாதார நிறுவனத்துக்கும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுக்கும் கூட ஆதரவை வழங்குகிறது” என்றும் அவர் கூறினார். உலகம் பூராவும் நேர்மையானதும் ஒப்புரவானதுமான தடுப்பூசி விநியோகத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு தடுப்பூசி தயாரிப்பு நாடுகள், கம்பனிகள் மற்றும் சம்பநதப்பட்ட தரப்புகளிடையே ஒத்துழைப்புக்கான சர்வதேச அரங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்ற யோசனையை சி ஜின்பிங் முன்வைத்தார். ” பெருந்தாற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் சக்திமிகு கருவிகளாகும். இருந்தாலும், தடுப்பூசி போடுவதில் காணப்படுகின்ற சமத்துவமற்ற தன்மைப் பிரச்சினை மிகவும் கடுமையானதாகக் காணப்படுகிறது.அதற்கு காரணம் அபிவிருத்தியடைந்த சில மேற்குலக நாடுகள் அவசரமாக தடுப்பூசி தேவைப்படுகின்ற நாடுகளுக்கு வெறுமனே உதட்டளவில் சேவையை செய்கின்ற அதேவேளை, தடுப்பூசிகளைப் பதுக்குகின்றன” என்று சீனாவின் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் ஒரு ஆராய்ச்சியாளரான சூ சியாவோஹுய் கூறினார் மட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்பு ஆற்றலையும் உள்நாட்டில் மிகப்பருமளவு தேவையையும் கொண்டிருக்கின்ற போதிலும், சீனா அவசரமாக தடுப்பூசி தேவைப்படுகின்ற 80க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமும் 43 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் அதன் கடப்பாட்டை மதிக்கிறது.

அதிவிசேட பதிலளிப்பு

பெருந்தொற்றின் விளைவாக தொடரும் அழிவு,கொரோனாவைரஸ் அடிக்கடி உருமாற்றமடைதல் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன ஜனாதிபதி மக்களின் உயிர்களுக்கும் சுகாதாரத்துக்கும் அதிமுன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அதன் மூலமாக அவர் மகத்தான அரசியல் பொறுப்புணர்வு மற்றும் துணிச்சலை வளிக்காட்டுவதுடன் அதிவிசேடமான சவாலொன்றுக்கு அதிவிசேடமான எதிர்வினைகளை செய்கின்றார். பொறுப்புணர்வுடனான பெரும்பாக பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் உலகளாவிய கைத்தொழிலும் விநியோக சங்கிலிகளும் பாதுகாப்பாகவும் மிருதுவாகவும் இயங்குவதை உறுதிப்படுத்த ஒத்துழைப்பை தீவிரப்படுத்துமாறும் ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு சி ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.

கடனை திருப்பிச் செலுத்துதல் இடைநிறுத்தம்சகலருக்கும்

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு குறிப்பாக, பிரத்தியேகமான சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் நாடுகளுக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியான ஆதரவைக் கொடுப்பது அவசியமானதாகும்” என்று அவர் கூறினார். மிகவும் வறிய நாடுகள் கடனை மீளச்செலுத்துவதை இடைநிறுத்துவதற்காக ஜி 20 நாடுகள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தை சீனா முழுமையாக செயற்படுத்துகின்றது.இதுவரையில் சீனா வறிய நாடுகள் தனக்கு மீளச் செலுத்தவேண்டிய கடனில் 1300 கோடி டொலர்களை பின்போட்டிருக்கிறது.இது ஜி 20 நாடுகள் மத்தியில் மிகவும் உயர்ந்த கடன் செலுத்துகை ஒத்திவைப்பாகும்.பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பொருளாதார — சமூக மீட்சிக்காகவும் கொவிட் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கான உதவியாகவும் சீனா 200 கோடி டொலர்களை வழங்கியிருக்கிறது. ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் பொருளாதார — சமூக மீட்சிக்காகவும் அடுத்த மூன்று வருடங்களில் சர்வதேச உதவியாக மேலதிகமாக 300 கோடி டொலர்களை சீனா வழங்கும் என்று உச்சிமகாநாட்டில் ஜனாதிபதி அறிவித்தார். நிதி உதவிக்கு மேலதிகமாக சீனா 150க்கும் அதிகமான நாடுகளுக்கும் 13 சர்வதேச அமைப்புக்களுக்கும் மருத்துவ விநியோகங்களையும் அனுப்பிவைத்திருக்கிறது.28000 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்களையும் 340 கோடி பாதுகாப்பு ச் சட்டைகளையும் 400 கோடி மருத்துவ சோதனை கருவிகளையும் சீனா உலகிற்கு வழங்கியிருக்கிறது. ” சீனா உண்மையில் சொன்னதைச் செய்திருக்கிறது.அதன் மூலமாக ஒரு பிரதான பொறுப்புவாய்ந்த நாடு என்றவகையில் அதன் கடப்பாடுகளை வெளிக்காட்டியிருக்கிறது” எனறு சூ சியாவோஹுய் கூறினார். பொறுப்புணர்வுடனான பெரும்பாக பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறும் உலகளாவிய கைத்தொழிலும் விநியோக சங்கிலிகளும் பாதுகாப்பாகவும் மிருதுவாகவும் இயங்குவதை உறுதிப்படுத்த ஒத்துழைப்பை தீவிரப்படுத்துமாறும் ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு சி ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.

சகலருக்கும் சுகாதாரத்துக்கான ஒரு சமூகம்

” ஒரு பொதுவான எதிர்காலத்துடன் மனிதகுலம் எழுச்சியும் வீழ்ச்சயும் பெறும் என்பதை பெருந்தொற்று மீண்டும் ஒரு தடவை நினைவுறுத்தியிருக்கிறது” என்று சீன ஜனாதிபதி கூறினார்.

சகலருக்கும் ஆரோக்கியமான உலக சமுதாயமான்றைக் கட்டியெழுப்பும் நோக்கிற்காக குரலெழுப்பி பாடுபடவேண்டும் என்றும் வைரஸை அரசியல்மயப்படுத்தி முத்திரைகுத்தும் எந்தவொரு முயற்சியையும் உறுதியாக நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அரசியல் திருகுதாளங்கள் உள்நாட்டு அரங்கில் காவிட் பரவல் தடுப்புக்கு உதவப்போவதில்லை.அது வைரஸுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை சீர்குலைக்கவும் உலகம் பூராவும் மக்களுக்கு பெருங்கெடுதியை கொண்டுவரவும் மாத்திரமே உதவும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.

வைரஸுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பைப் பொறுத்தவரை ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பொறுப்புக்களை சுமக்கவேண்டிய தேவையிருக்கிறது ; குறைபாடுகளைக் களைவதற்கான செயற்பாடுகள், பொறுத்தவரை,காலத்தை விரயமாக்கக்கூடாது ; முக்கியமான பொதுச்சுகாதார அவசரகாலநிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கான ஆற்றலையும் தயார்நிலையையும் மேம்படுத்துவதற்கான முயற்சியிலும் பலவீனமான தொடர்புகளை பலப்படுத்துவதிலும் துரித செயற்பாடுகள் அவசியம் என்று அவர் சொன்னார்.

அறிகுறிகளையும் மூலவேர் காரணிகளையும் கூர்மையாக கவனித்து செயலாற்றவேண்டிய அவசியத்தை வலியுறுத்திய சீன ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளினதும் உலக சுகாதார நிறுவனத்தினதும் பாத்திரத்தை பலப்படுத்தவேண்டும் ; எதிர்காலப் பெருந்தொற்றுகளை தடுப்பதற்கு உலகளாவிய நோய்த்தடுப்பு — கட்டுப்பாட்டு முறைமை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ” எமது கண்காணிப்பு ஆற்றலை மேம்படுத்தவேண்டியதும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவேண்டியதும் அவசரகால எதிர்வினைகளை செய்யவேண்டியதும் முக்கியமானதாகும்” முக்கியமானதாகும். பிரதான தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆற்றல், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுத்தல்,அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவ வழங்குதல் ஆகியவையும் முக்கியமானவையாகும்.

” வைரஸ் நாடுகளின் எல்லைகளை மதிப்பதில்லை.நாடுகள் பூகோளவியல், இனம்,வரலாறு, கலாசாரம் மற்றும் சமுதாய முறைமை ஆகியவற்றில் இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் கடந்து பொதுவானதொரு எதிர்காலத்துடனான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்” என்று சீன சமூக விஞ்ஞான அகாடமியின் ஐரோப்பிய கற்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஃபெங் ஷொங்பிங் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.