head


24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை!

|Thursday, 03rd June 2021|| Page Views: 1

24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை சாதனை படைத்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம், சத்தாராவில் உள்ள பால்தன் மற்றும் மாசூர்னே பகுதிகளுக்கு இடையே 39.69 கி.மீ சாலையை 24 மணி நேரத்தில் போட்டு சாதனை படைத்துள்ளது. அதாவது, மே 30ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கிய சாலைப் போடும் பணிகள், மே 31ம் தேதி காலை 7 மணி வரையில் 39.69 கி.மீ சாலை போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் தனது டுவிட்டர் பக்கத்தில், சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மசூர்னே வரை 39.69 கி.மீ தூரத்துக்கு தரமான கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது,' எனப் பதிவிட்டுள்ளார்.

அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், சிரமங்கள் இருந்தபோதிலும், திட்டத்தை விரைவாக முடிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது,' என்றார். சுமார் 474 தொழிலாளர்கள் மற்றும் 250 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் நிறைவடைந்தன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.