head


பிரதமர் மோடியிடம் கமலா ஹாரிஸ் உறுதி!

|Friday, 04th June 2021|| Page Views: 1

பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு தடுப்பூசி வினியோகம் செய்வதாக உறுதி அளித்தார். இந்தியாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இது குறித்து, வெள்ளை மாளிகையின் தலைமை செய்தித் தொடர்பாளர் சைமன் சாண்டர்ஸ் கூறியதாவது:அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினார்.

உலகில் கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க, அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார தேவைகள் குறித்தும் மோடியிடம், கமலா ஹாரிஸ் எடுத்துரைத்தார்.

அப்போது, இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்வதாக, கமலா ஹாரிஸ் உறுதியளித்தார். கொரோனாவுக்கு பின், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இருவரும் கலந்துரையாடினர்.இவ்வாறு அவர் கூறினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.