head


ஒலிம்பிக்ஸ் போட்டிகள்: பிரதமர் ஆய்வு!

|Friday, 04th June 2021|| Page Views: 1

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜூலையில் துவங்கவுள்ள, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் நம் வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன்.3) ஆய்வு செய்தார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், ஜூலை 23ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் துவங்குகின்றன. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கவுள்ள நம் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

இதுவரை, 11 விளையாட்டு பிரிவுகளில், 100 வீரர்கள் வரை தேர்வாகி உள்ளனர். மேலும், 25 வீரர்கள் தேர்வு செய்யும் பணி, விரைவில் முடிவடைய உள்ளன. இந்நிலையில், வீரர்களின் தயார் நிலை மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன்.3) ஆய்வு செய்தார். ஒலிம்பிக்சில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கு, கொரோனா தொற்று நேரத்திலும், தடையில்லா பயிற்சி வழங்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது குறித்தும், பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன், ஜூலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடி, 135 கோடி மக்கள் சார்பில் அவர்களை ஊக்கப்படுத்த உள்ளேன், என பிரதமர் மோடி தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.