head


கோவிட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி!

|Saturday, 05th June 2021|| Page Views: 1

கோவிட்டிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) விஞ்ஞானிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கோவிட் பெருந்தொற்று காலத்தில், ஒராண்டில் தடுப்பூசி கிடைப்பதை இந்திய விஞ்ஞானிகள் உறுதி செய்ததுடன், தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளனர். இந்த பெருந்தொற்றுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்திற்கும் இந்திய விஞ்ஞானிகள் பங்களிப்பு அளித்துள்ளனர்.

இந்தியா தன்னிறைவு பெறுவதில்,விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறுவதையே தேசம் விரும்புகிறது. தன்னிறைவு இந்தியா என்ற கனவை நனவாக்க, நாம் உறுதிபூண்டுள்ளோம். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நமது விஞ்ஞானிகள் முனைப்புடன் உள்ளனர் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய விஞ்ஞானிகள், அதனை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.