head


ஜீன்ஸ், டீசர்ட் அணிய சிபிஐ அதிகாரிகளுக்கு தடை!

|Saturday, 05th June 2021|| Page Views: 1

சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ், டீசர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷ_ அணிய தடை விதித்து அந்த அமைப்பின் இயக்குநர் சுபோத் குமார் ஜெயிஸ்வால் உத்தரவிட்டு உள்ளார். சிபிஐ இயக்குநராக இருந்த சுபோத் குமார் ஜெயிஸ்வால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொறுப்பேற்று கொண்டார். இந்த அமைப்பின் 33வது இயக்குநராக பதவியேற்ற அவர், நிர்வாக ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவர் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் கூறப்பட்டு உள்ளதாவது: சிபிஐ ஆண் அதிகாரிகள் சாதாரண பேண்ட், சட்டை, ஷ_ அணிந்து வரலாம். ஜீன்ஸ், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷ_ அணிந்து வரக்கூடாது, ஷேவ் செய்திருக்க வேண்டும். பெண் ஊழியர்கள், சாதாரண சட்டை, பேண்ட் மற்றும் புடவை அணிய வேண்டும.

இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் பொருந்தும் எனவும், அனைத்து கிளை அலுவலகங்களின் தலைவர்கள், அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைவரும் வழக்கமான உடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக, ஜீன்ஸ், டீசர்ட் உள்ளிட்ட ஆடைகளை அணிய துவங்கினர். இதனை யாரும் தடுக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள், குறைந்தபட்சம் வழக்கமான காலர் சட்டை, பேண்ட் அணிய வேண்டியது அவசியம் என்றார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.