head


கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ்: கர்நாடக அரசு முடிவு!

|Saturday, 05th June 2021|| Page Views: 1

கன்னட மொழியை அழகற்ற மொழி என கூகுள் தேடுபொறியில் காட்டியதற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்றை கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பவுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. அழகற்ற மொழி என்ற தேடலில் கூகுளில் கன்னட மொழி என்பது முதன்மையாக வந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவதாக கூகுள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு கூகுள் தேடுபொறியில் வரும் விடையையும் மாற்றியமைத்தது. இது தொடர்பாக கர்நாடகத்தை சேர்ந்த சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இது சரியானது அல்ல என எங்களுக்கு தெரியும். இருப்பினும் நாங்கள் இதை திருத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கிறோம். இது குறித்து எங்களுக்கு தெரியவந்தவுடன் சரி செய்ய நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், என கூகுள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.