head


வட கொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பாக ஆலோசனை!

|Wednesday, 09th June 2021|Political| Page Views: 1

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பாக, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அரச உயர் மட்ட அதிகாரிகளுடன், முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வட கொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பில், அதிகாரிகளுக்கு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான மாற்றங்களை கொண்டுவர, தேவையான திட்டங்களை அதிகரிகவும், ஜனாதிபதி ஆலோசனையாக வழங்கியுள்ளார். நேற்று (7) இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டம், சிறிய அளவானது எனவும், இந்த வார இறுதிக்குள், மிகப் பெரிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும், வட கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவ ஆரம்பித்து முதல், உலக நாடுகளுடனான தொடர்பை துண்டித்த வட கொரியா, தற்போது, கொரோனா பரவலை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக, கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, சரங்கு கப்பல்கள் வட கொரியாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டதால், மக்கள், போதிய வருமானம், வாழ்வாதாரம் இல்லாமல், ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.