head


சீனாவில் இருந்து மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன!

|Thursday, 10th June 2021|Political| Page Views: 1

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்காக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக 10 இலட்சம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் வந்திருந்த நிலையில், இன்று காலை மேலும் 10 இலட்சம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை 3.1 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.