head


உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜூன ஒபயசேகரவை நியமிக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு, நாடாளுமன்ற சபை அனுமதி!

|Thursday, 10th June 2021|Political| Page Views: 1

உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக அர்ஜுன ஒபயசேகரவை நியமிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவுக்கு, நாடாளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கே.பி.பெர்னாண்டோவை நியமிக்கும் முன்மொழிவுக்கும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி.தெஹிதெனியவை, நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கவும் நாடாளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.