head


தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது எண்ணிக்கை 26 ஆயிரத்து 920 ஆக அதிகரிப்பு!

|Thursday, 10th June 2021|Crime| Page Views: 1

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டதனிமைப்படுத்தல் உத்தரவு, நாடு தழுவியதாக அமுல்படுத்தியுள்ள பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மீறிய நடமாட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறன்றது.

இந்தநிலையில் இன்று காலை 06.00 மணியுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில், இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஒக்-31 முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 26 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.