head


ஐ.நா.வின் 9-வது பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் பதவி வகித்து வருகிறார!

|Thursday, 10th June 2021|Political| Page Views: 1

ஐ.நா.வின் 9-வது பொதுச்செயலாளராக போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (வயது 72) கடந்த 2017-ம் ஆண்டு 1ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச்செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெசே தேர்வாகிறார்.

எதிர்வரும் 18-ம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படுவார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவ
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.