head


இந்தியாவில் இதுவரை 23.8 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!

|Thursday, 10th June 2021|| Page Views: 1

கரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செவ்வாய்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மக்களுக்கு 23 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 635 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 9 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 552 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 6 கோடியே 8 லட்சத்து 91 ஆயிரத்து 662 பேர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு 16 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரத்து 521 முதல் டோஸ்களும் 8 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 071 இரண்டாவது டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

45 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் 7 கோடியே 25 லட்சத்து 46,725 பேருக்கு முதல் டோஸ், 1 கோடியே 15 லட்சத்து 34 ஆயிரத்து 478 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரத்து 505 பேருக்கு முதல் டோஸும், 1 கோடியே 94 லட்சத்து 36 ஆயிரத்து 78 பேருக்கு இரண்டாவது டோஸும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.