head


சென்னைக்கு 1 கிலோ தங்க ஸ்பேனர்கள் கடத்தல் - சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்!

|Wednesday, 11th May 2022|| Page Views: 1

சென்னைக்கு வந்த விமானத்தில் 47.56 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ எடையிலான 6 தங்க ஸ்பேனர்களை கடத்தி வந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த மெகபூபாஷா (26) என்ற பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது உடமைகளுக்குள் டூல்ஸ் பாக்ஸ் ஒன்று இருந்தது. அதை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 24 காரட் தங்கத்தில் 6 ஸ்பேனர்கள் இருந்தன. அவை மொத்தம்ஒரு கிலோ 20 கிராம் எடை இருந்தது. இதன், சர்வதேச மதிப்பு ரூ. 47.56 லட்சம் என்று தெரிய வந்தது.

இதையடுத்து தங்க ஸ்பேனர்களை பறிமுதல் செய்து, மேகபூபாஷாவைகைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.