head


தமிழ்நாடு பாஜகவினர் மதுரையில் ஆலோசனை - 2024 தேர்தலுக்கு வியூகம்!

|Wednesday, 11th May 2022|| Page Views: 1

தமிழ்நாடு பாஜகவினர் வரும் 2024 மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெறுகிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில அணி பிரிவு தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றி வியூகம், நடைபெற்று முடிந்த தேர்தல்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.