அசாமில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் விரைவில் வாபஸ்!
|Wednesday, 11th May 2022||
Page Views: 1
|
|
அசாமிலிருந்து, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் விரைவில் முற்றிலுமாக நீக்கப்படும், என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
வட கிழக்கு மாநிலமான அசாமில், ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இரண்டு நாள் பயணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார்.
கவுகாத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அசாம் போலீசாருக்கு விருது வழங்கி, அமித் ஷா கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:அசாம் போலீசார் மிக சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
பயங்கரவாதம், எல்லை பிரச்னை, போதை பொருள், ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றனர்.அசாமில் பயங்கரவாதத்தை ஒடுக்கவே ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முன் எப்போதும் இல்லாத அளவில் மேம்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள ௨௩ மாவட்டங்களில் இந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல பயங்கரவாத அமைப்புகள், அமைதி ஒப்பந்தம் செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன. இதனால், விரைவில் மாநிலம் முழுதும் இந்த சட்டம் ரத்து செய்யப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கிளர்ச்சியை சமாளித்தல், குற்றங்களை கட்டுப்
படுத்துதல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், பொது மற்றும் முக்கிய நபர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு, ஜனாதிபதி வண்ண விருது வழங்கப்படுகிறது
இந்த வகையில், இந்த விருதைப் பெற்றுள்ள ௧௦வது மாநிலம் என்ற சிறப்பை, அசாம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
|
|