இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் – சுப்ரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவு!
|Wednesday, 11th May 2022||
Page Views: 1
|
|
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கருத்து வௌியிட்டுள்ளார்.
வரலாற்று பிணைப்புள்ள அயலவரான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தலைநகர் புது டெல்லியில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அயல்நாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா ஏற்கனவே 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைவான பாதுகாப்பை மீள உறுதிப்படுத்துவதற்காக இந்தியா, இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் இந்தியாவிற்கு எதிரான வௌிநாட்டு சக்திகள் மக்களின் ஆத்திரத்தை தமக்கு சாதகமாக்கி வருவதாகவும் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
|
|