head


தேச துரோக வழக்குகளை பதியக்கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

|Thursday, 12th May 2022|| Page Views: 1

தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக வழக்குகளை பதியக்கூடாது என, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நாட்டில் உள்ள தேச துரோக சட்டங்களின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக, இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தை அரசு பரிசீலிக்கும் நடைமுறைகள் முடிவடையும் வரை தேச துரோக சட்டப்பிரிவுகள் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.