head


உக்ரைன்60 லட்சம் அகதிகள் வெளியேற்றம்!

|Saturday, 14th May 2022|General| Page Views: 1

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உக்ரைன் மீது ரஷிய படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறிவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவா்களில் 90 சதவீதத்தினா் பெண்களும் சிறுவா்களும் ஆவா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் ரஷியாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.