head


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் காலமானார்!

|Saturday, 14th May 2022|Political| Page Views: 1

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்(73) உடல் நலக்குறைவால் காலமானார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக ஷேக் கலீஃபா 2004ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால், 2014ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, பெயரளவில் மட்டுமே அதிபராக செயல்பட்டார். அவரது சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் நிர்வாக விவகாரங்களை கவனித்து வருகிறார்.

அல்-நஹ்யான் குடும்பத்திற்கு 150 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய ஏழு எமிரேட்களின் எண்ணெய் வளமிக்க தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஷேக் கலீஃபா இருந்தார்.

அவர் இறந்த அலுவல்பூர்வமாக தகவலை றுயுஆ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலீஃபாவின் மறைவையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்க விடப்படும். 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன பணிகள் 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.