head


உக்ரைனின் கீவ் நகரில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்க முடிவு!

|Saturday, 14th May 2022|| Page Views: 1

உக்ரைன் தலைநகர் கீவில் மீண்டும் இந்திய தூதரகம் செயல்பட துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கடந்த 75 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது. போரினால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போரின் போது கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தின் நடவடிக்கைகளால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் கீவ் நகரில் செயல்பட்ட இந்திய தூதரகம் தற்காலிகமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா நகரத்திற்கு மாற்றப்பட்டது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.