head


சுதந்திரத்தை பற்றி இளைஞர்கள் அறிய வீடுகள் தோறும் தேசிய கொடி!

|Monday, 01st August 2022|| Page Views: 1

வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் இயக்கம் துவங்கப்பட உள்ளது; இதன் வாயிலாக சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களை, இளைய சமூகத்தினர் அறிய முடியும், என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.அமைச்சர் முருகன் நேற்று அளித்த பேட்டி:ஆக., 13 முதல், 15 வரை வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் இயக்கம் துவங்க உள்ளது.

இதன் வாயிலாக, சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களை, இன்றைய இளைய சமூகத்தினர் அறிய முடியும்.பிரதமர் மோடி அரசு, நாடு முழுதும் கூடுதலாக 24 ஆயிரம் கிராமங்களுக்கு, '4ஜி' அலைவரிசை வழங்க சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கூடுதலாக, 534 கிராமங்களுக்கு, 'பிராட் பேண்ட்' சேவை வழங்கப்படும்.தெருவோர வியாபாரிகளுக்கு பிணை இல்லாமல், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே, 1.59 லட்சம் பயனாளிகளுக்கு, அந்த நிதிவழங்கப்பட்டுள்ளது.கூடுதலாக, 75 ஆயிரம் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும். தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டதில் தமிழகத்திற்கு, 10 விருதுகள் கிடைத்திருப்பது பெருமை.

வரும் செப்., 17ல் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது.அன்று மிகப் பெரிய அளவில், சென்னை மெரினா, காசிமேடு மீன்பிடி துறைமுகம், துாத்துக்குடி உள்ளிட்ட நாடு முழுதும் உள்ள முக்கிய கடற்கரைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவங்கப்படும்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், மத்திய அரசுடன் இணைந்து, மத்திய அரசின் திட்டங்களை நன்றாகவே செயல்படுத்தி வருகின்றன.மத்திய அரசின் நிறுவனங்கள் வேலைக்கு நடத்தும் தேர்வு மிகவும் வெளிப்படையானது.

அனைத்து தேர்வுகளும் இணையதளம் வாயிலாக நடத்தப்படுகின்றன. தமிழ கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் மத்திய நிறுவன தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஷ
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.