எகிப்தில் லாரி மீது பஸ் மோதி விபத்து 17 பேர் பலி!
|Thursday, 04th August 2022|Crime|
Page Views: 1
|
|
தறிகெட்டு ஓடிய பஸ் எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. கொய்ரோ, எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்தில் இருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
முன்னதாக கடந்த மாதம் 20-ந்தேதி எகிப்தின் மினாயா மாகாணத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானதும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
|
|