head


தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி நிச்சயம்!

|Thursday, 04th August 2022|Political| Page Views: 1

தைவானுக்கு நான்சி பெலோசி சென்றதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சீன ஆதரவாளா்கள்.

தங்களது கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்ட விவகாரத்தில், ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் {ஹவா சன்யிங்கிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது: தைவானில் நான்சி பெலோசி சுற்றுப் பயணம் மேற்கொண்டால், அமெரிக்காவுக்கு எதிரான மிகக் கடுமையான எதிா்வினைகள் ஆற்றப்படும் என்று ஏற்கெனவே எச்சரித்திருந்தோம்.

தற்போது அவா் அந்தத் தீவுக்கு சென்று வந்துள்ளதால் ஏற்கெனவே நாங்கள் என்ன கூறினோமோ, அதனை நிச்சயம் செயல்படுத்துவோம். அந்த நடவடிக்கைகளை மிகவும் கடுமையானதாக, திறன் மிக்கதாக, தீா்க்கமானதாக இருக்கும் என்றாா் அவா்.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் தெரிவித்தது. எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தைவான் வான்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டது. மேலும், தைவான் எல்லையையொட்டி பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. நான்சி பெலோசியின் இந்தப் பயணம், தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரித்தது.

மேலும், வான் மற்றும் கடற்பகுதியில் ஆகஸ்ட் 4 முதல் 7-ஆம் தேதி வரையில் ராணுவ ஒத்திகை நடைபெறும் என்றும் இது அமெரிக்காவுக்கும், சுதந்திரத்தை கோரும் தைவான் அமைப்புகளுக்கான எச்சரிக்கை என்றும் சீன ராணுவம் தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ, ‘தைவான் விவகாரத்தில் சில அமெரிக்க அரசியல்வாதிகள் நெருப்புடன் விளையாடுகிறாா்கள்’ என்றாா்.

இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ‘போா் ஒத்திகை அறிவிப்பு, ராஜீய ரீதியிலான எச்சரிக்கைகளைத் தவிர பொருளாதாரத் தடைகள் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சீனா எடுக்குமா?’ என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சரும் செய்தித் தொடா்பாளருமான ஹவா சன்யிங் இவ்வாறு பதிலளித்தாா்.

தென் சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா தனது மூா்க்கத்தனத்தை அதிகரித்து வருகிறது. இருந்தாலும், தைவானைப் பொருத்தவரை தற்போதைய நிலையே தொடா்ந்து நீடிக்க வேண்டும் என்பதையும், நட்பு நாடுகளுடன் தொடா்ந்து நல்லுறவு நிலவு வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்.

- அந்தோணி ஆல்பனீஸ், ஆஸ்திரேலிய பிரதமா் சீன எதிா்ப்பையும் மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் சென்றிருப்பது, பிராந்திய நிலைத்தன்மையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.