head


சுற்றுச்சூழல் கொள்கை மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

|Thursday, 04th August 2022|| Page Views: 1

பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, 2030ம் ஆண்டுக்குள் தட்பவெப்பநிலையை, 1.5 டிகிரி செல்ஷியஸ் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, அதிகளவில் கரியமில வாயு வெளியேறுவதை தடுப்பது, மாசு ஏற்படுத்தாத மின்சக்திக்கு மாறுவது போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு நாடும், நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டத்தை உருவாக்கிஉள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.அப்போது, 'பஞ்சமிர்தம்' எனப்படும் ஐந்து முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

அதன்படி, 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மின்தேவையில், 50 சதவீதம் மாசு ஏற்படுத்தாத முறையில் தயாரிப்பது போன்ற திட்டங்களை அவர் முன் வைத்தார்.இந்த ஐந்து திட்டங்களும் இணைந்த திருத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட தேசிய பங்களிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.