தமிழருக்கான தீர்வே சர்வகட்சிக்கான ஆதரவை தீர்மானிக்கும்!
|Friday,, 05th August 2022|Political|
Page Views: 1
|
|
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஜனாதிபதியிடம் யோசனைகள் சில முன்வைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த யோசனைகளுக்கான ஜனாதிபதியின் பதிலை கருத்திற்கொண்டு சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தமது கட்சி தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் தமக்கு இல்லை எனவும், வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தாம் முன்னாள் நீதிபதி என்பதால் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்வதில் தனக்கு விசேட அக்கறை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
|
|